×

கோவையில் தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 500 பேருக்கு நோட்டீஸ்

கோவை,ஏப்.18: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சிகள் வழங்கப்பட்டது. மொத்தம் 17,102 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு இரண்டு கட்டமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்த இரண்டு கட்ட பயிற்சி வகுப்புகளிலும் பல்வேறு காரணங்களை கூறி சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்காமல் இருந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் அனைவருக்கும் தேர்தல் பிரிவினர் விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் வழங்கினர். மேலும், தேர்தல் பயிற்சியில் பங்கேற்காதவர்கள் நாளை (19-ம் தேதி) நடக்க கூடிய பயிற்சி வகுப்பில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

 

Tags : Coimbatore ,
× RELATED சிறுமுகையில் திமுக வேட்பாளருக்கு கிரீடம் சூட்டி மக்கள் வரவேற்பு