×

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்பு

கோவை, ஏப்.16: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்கு சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதனை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீளமேடு பி.எஸ்.ஜி. தொழில் நுட்ப கல்லூரி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களான வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்கு பதிவு அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்காக தபால் ஓட்டு செலுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளையும் மாநகராட்சி கமிஷனர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) வினோத்குமார், தனி துணை ஆட்சியர் வாணி லட்சுமி ஜெகதாம்பாள், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதுரா உட்பட பலர் இருந்தனர்.

 

Tags : Coimbatore ,Koundampalayam ,Coimbatore North ,Singanallur ,
× RELATED வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்பு