×

தார்ச்சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை

கோவை, ஏப். 14: கோவை மாநகராட்சி மதிமுக மாமன்ற குழு தலைவர் சித்ரா வெள்ளியங்கிரி மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: கோவை 26வது வார்டு எல்லைத் தோட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறந்த முறையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் இங்கு எட்ஜ் டூ எட்ஜ் முறையில் அமைக்காமல் சாலையின் இருபுறமும் 2 முதல் 3 அடி வரை விட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இங்குள்ள எல்லை தோட்டம் சாலையில் இருந்து மழைநீர் வடிகால் பாதை வரை இருபுறமும் சாலை அமைக்கவில்லை. இடைவெளி அதிகமாக உள்ளது. எனவே, வாகன ஓட்டிகளின் வசதியை கருத்தில் கொண்டு இரு புறமும் விடுபட்டு போன சுமார் 2 அடி தார்ச்சாலையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Covey ,Municipal Commissioner's Office ,Chitra Viliyangiri ,Committee of the Municipal Commissioner of Goa Municipality ,26th Ward Border Garden of Goa ,
× RELATED கோவையில் கடந்த 3 மாதத்தில் பாம்புகளை...