- பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி தொழில்நுட்ப நாள்
- கோயம்புத்தூர்
- டெக் தினம் 2026
- பிஎஸ்ஜி டெக்னாலஜி
- டாக்டர்
- ஸ்ரீராம்
- மின்-ஒளியியல் அமைப்புகளுக்கான ஆய்வகம்
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு
- இஸ்ரோ
- பெங்களூரு
கோவை, ஏப். 10: கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறும் டெக் டே 2026 கொண்டாடப்பட்டது. விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, பெங்களூரு லெபாரட்டரி பார் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்சின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் பிரகாசன் தலைமை வகித்தார்.
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா நிகழ்வின் பகுதியாக, பல்வேறு தரப்புகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு கல்லூரி உறுப்பினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டதுடன், சிறந்து விளங்கிய பேராசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. கல்வி, விளையாட்டு, சமூகப் பணிகள் மற்றும் தலைமைத்துவம் உள்ளிட்ட துறைகளில் சாதனையாற்றிய மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
கல்லூரியின் உயரிய விருதான ‘கூரத்தாழ்வார் விருது இறுதியாண்டு பி.இ மின்துறை மற்றும் மின்னணு பொறியியல் மாணவர் மேகலன் என்பவருக்கு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் டாக்டர் ஸ்ரீராம் பேசும்போது, இஸ்ரோவில் உள்ள வாய்ப்புகளை எடுத்துரைத்து இளம் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள ஊக்குவித்தார். டெக் டே விழா 2026, பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா ஆண்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்ததுடன், அதன் அர்ப்பணிப்பையும் முன்னிலைப்படுத்தியது.
