- திமுக
- வடக்கு எதாகுதி
- கோயம்புத்தூர்
- துரை.செந்தமிழ் செல்வன்
- கோயம்புத்தூர் வடக்கு தொகுதி
- வடவள்ளி மார்க்கெட் மைதானம்
- வடவள்ளி
கோவை, ஏப்.13: கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளராக துரை.செந்தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். இவர் தனது தொகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். நேற்று வடவள்ளி சந்தை மைதானம் பகுதியில் பிரசாரத்தை துவங்கினார். தொடர்ந்து வடவள்ளி பகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனையடுத்து பங்களா தோட்டம், ஸ்ரீராம் அவென்யூ, மருதம் நகர், மாசாணியம்மன் அவென்யூ, தாம்பராஸ், விகேஎஎஸ் கார்டன், வஉசி நகர், தக் ஷா, நஞ்சப்பன் வீதி, மருதாபுரம், நியூ கோல்டன் நகர், பிள்ளையார் காலனி, கோல்டன் நகர், திருவள்ளுவர் நகர், வெள்ளிங்கிரி நகர், அபிராமி நகர், அருணாசலம் நகர், கொங்கு நகர், எஸ்பிகே நகர், முருகன் நகர், தோப்பில் நகர், பாரதி நகர், வள்ளியம்மன் கோயில் வீதி, கலைஞர் நகர், பாரதி கார்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மக்களிடம் பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். ஏற்கனவே மகளிர் உரிமை தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். மாணவ மாணவிகள், இளைஞர்கள், வயதானவர்கள், தொழில் துறையினருக்கு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்.
அடுத்த திமுக ஆட்சி அமையும் போது திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றி தரப்படும். கோவை மாவட்டத்தில் மக்களுக்காக ஏராளமான திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது. அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தருவோம், ’’ என்றார். தமிழக அரசு கோவைக்கு செயல்படுத்திய சிறப்பு வாய்ந்த திட்டங்களை எடுத்து கூறி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். உடன் திமுக பகுதி செயலாளர் வ.ம சண்முகசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர்கள் சரஸ்வதி குப்புசாமி, மாவட்ட பொருளாளர் எஸ்எம்பி முருகன், மண்டல தலைவர் தெய்வயானை, மதிமுக உயர்நிலை குழு உறுப்பினர் மோகன்குமார், பயனியர் தியாகு, தேமுதிக நிர்வாகிகள் செல்வலிங்கம், விஜயகுமார், காங்கிரஸ் நிர்வாகிகள் ரங்கநாதன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் வக்கீல் ராவணன், கொமதேக நிர்வாகி ரவி, திமுக வட்ட செயலாளர்கள் சின்னச்சாமி, வேலுச்சாமி, மகாலட்சுமி, கனகராஜ், சின்னத்தாய், விஸ்வாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
