×

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் கோவூரில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்

பல்லாவரம், ஏப்.11: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் நேற்று கோவூர், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, தண்டலம் ஆகிய பகுதிகளில் வேட்பாளர் தா.மோ.அன்பரசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பொதுமக்களிடம் பேசுகையில், ‘கடந்த தேர்தலின் போது, நாங்கள் கோவூர் பகுதி மக்களுக்கு புதிய பேருந்து நிலையம், சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு ரூ.1 கோடியில் புதிய தேர் செய்யப்பட்டது. இவ்வாறு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். மீண்டும் திமுக மகத்தான வெற்றி பெற்றவுடன், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டம், மெட்ரோ குடிநீர் திட்டம் போன்ற பல பயனுள்ள திட்டங்கள், மாநகராட்சிக்கு இணையாக கோவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் உடனடியாக நிறைவேற்றி தரப்படும். மக்களின் அடிப்படை தேவைகள் விரைந்து நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்துள்ள திட்டங்கள் இப்பகுதியில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சரின் இந்த வாக்குறுதி அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வாக்கு சேகரிப்பின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். இதேபோல், ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து திமுக கவுன்சிலர்கள், கூட்டணி கட்சியினர் அந்தந்த பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Gowur ,Ballavaram ,Alandur Assembly Constituency ,Mo. Anbarasan ,Govur ,Tarapakkam ,Second Command ,Dandalam ,
× RELATED பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல்...