×

சைதையில் திமுக இதுவரை பெற்ற வெற்றிகளிலேயே வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெறும்

சென்னை, ஏப்.11: சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை, 139வது வார்டில் உள்ள சாரதி நகரில் தொடங்கி முனுசாமி தெரு, மேற்கு ஜோன்ஸ் சாலை, காந்தி தெரு, வள்ளுவர் தெரு, காமராஜர் தெரு, வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, விஜயராகவன் தெரு, விநாயகர் கோயில் தெரு, நியூ காலனி 2வது தெரு, முதல் தெரு, ஜெயராஜ் தியோட்டர் வரை நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் மீண்டும் மாலை 4 மணிக்கு மேற்கு சைதாப்பேட்டை ஜெயராஜ் தியேட்டரிலிருந்து தொடங்கி வீதி மாரியம்மன் கோயில் தெரு வரை இரவு 9 மணி வரை 10 மணி நேரம் நடந்தே சென்று சைதை தொகுதியில் செய்த சாதனைகளையும், திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்களையும், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவற்றை நிறைவேற்ற இருக்கும் செயல்திட்டங்களையும் மக்களிடையே எடுத்துரைத்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தத் தேர்தலை பொறுத்தவரை, இதுவரை எந்த தேர்தலிலும் கண்டிராத, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வித்தியாசமான வெற்றியை பெறப்போகிறது. இந்த வாக்குச் சேகரிப்பில் பகுதி செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, தொகுதி பொறுப்பாளர் சைதை சாதிக், வட்ட செயலாளர் சேகர், காங்கிரஸ் ஜோதிபொன்னம்பலம், விசிக ஜேக்கப், மதிமுக சுப்பிரமணி, தேமுதிக ஆனந்தன், மநீம கதிர், எஸ்டிபிஐ அபுதாகிர், பிலால், இயூமு.லீக் கவுஸ் பேக், தமுமுக சாகுல்ஹமீது, அப்துல் ஜபார், சிபிஐ சிவா, சிபிஎம் வேல்முருகன், உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Tags : DMK ,Saidapet ,Chennai ,Ma. Subramanian ,Sarathi Nagar ,ward ,Munusamy Street ,West Jones Road ,Gandhi Street ,
× RELATED மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன்...