×

இறுதி ஊர்வலத்தில் தகராறு தொழிலாளி அடித்து கொலை

பெரம்பூர், ஏப்.10: வியாசர்பாடி எம்கேபி நகர் 10வது மேற்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் இம்ரான் (29), மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் மீது 5 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல இம்ரான் வேலைக்கு சென்றார். மாலை 6.30 மணியளவில் உறவினரான வேலு என்பவர் போன் செய்து இம்ரானை, காதர் பாஷா என்பவர் அடித்ததில் மார்பு பகுதியில் வலி இருப்பதாக இம்ரானின் மனைவியிடம் கூறியுள்ளார்.
மேலும், ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்புவதாக வேலு கூறினார். இதனையடுத்து, இம்ரானின் மனைவி துர்கா ஆட்டோ ஓட்டுநரிடம் வீட்டிற்கு வரும் வழியை கூறியுள்ளார். பின்னர், மதுபோதையில் ஆட்டோவில் இருந்த இம்ரானை அழைத்து சென்று வீட்டில் படுக்க வைத்தனர். நீண்டநேரம் அசைவின்றி கிடந்ததால் சந்தேகமடைந்த துர்கா 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்தபோது இம்ராம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதனை துர்கா ஏற்க மறுத்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம், இம்ரானை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இம்ரான் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த எம்கேபி நகர் போலீசார் விசாரித்ததில், திருநங்கை புஷ்பா என்பவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக இம்ரான் மற்றும் அவரது அம்மா அமுதா ஆகியோர் சென்றனர்.

அங்கு இம்ரான் மது அருந்திவிட்டு மேளம் அடிக்கும் தொழிலாளர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்துள்ளார். அப்பொழுது வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 65வது பிளாக்கை சேர்ந்த காதர் பாட்ஷா என்பவர் இம்ரானிடம் நீ எதற்கு எனது ஆட்களுக்கு தேவையில்லாமல் டீ வாங்கி கொடுக்கிறாய், என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. மூலக்கொத்தளம் சுடுகாடு பகுதியில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த காதர் பாட்ஷா இம்ரானை சரமாரியாக தாக்கியதில் வீட்டிற்கு வந்தது உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்த இடம் வண்ணாரப்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்டது என்பதால் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Perambur ,Imran ,10th West Cross Street, Vyasarpadi MKB Nagar ,
× RELATED உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.66 கோடி விடுவிப்பு