×

ரூ.91 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளகோவில், ஏப். 9: வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.91 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது. வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளகோவில், விளாத்திகுளம். வாணியம்பாடி, மங்கலபட்டி, மணப்பாறை, முத்தூர் பகுதி விவசாயிகள் 146 பேர், 62 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் முதல் தர பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.168.99க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.114.99க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் 91 லட்சத்து 51 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தேங்காய் பருப்பு மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேங்காய் பருப்பு மூலம் செய்திருந்தனர்.

 

Tags : Vellakovil ,Vilathikulam ,Vaniyambadi ,Mangalapatti ,Manapparai ,Muthur ,
× RELATED வீட்டு பத்திரத்தை தொலைத்த வங்கிக்கு...