- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காங்கேயம்
- திமுக
- அமைச்சர்
- எம்.பி சமினாதன்
- சென்னிமலை
- Kuppichipalayam
- முருங்கத்தொழுவு
- பசுவபட்டி
- எக்கட்டம்பாளையம்
- முகாசிபிடாரியூர்
- அமைச்சர்…
காங்கயம், ஏப்.8: காங்கயம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தொகுதிக்கு உட்பட்ட சென்னிமலை பகுதி, குப்பிச்சிபாளையம், முருங்கத்தொழுவு, பசுவப்பட்டி, எக்கட்டாம்பாளையம், முகாசிபிடாரியூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் திமுக ஆட்சியில் செய்த நல திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார். இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: 22 ஊராட்சிகளை சேர்ந்த 434 குடியிருப்புகளில் ரூ.482 கோடி மதிப்பீட்டில் நிலத்தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
நொய்யல் ஆற்றின் குறுக்கே தலா ரூ.8 கோடியில் பசுவப்பட்டி- பரஞ்சேர்வழி, மருதுறை-கே.ஜி.வலசு என நொய்யல் ஆற்றின் குறுக்கே 2 உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டது. கே.ஜி வலசில் புதிய சித்த மருத்துவமனை,ரூ.3 கோடியில் கொடி காத்த குமரன் மண்டபம், ரூ.2.5 கோடியில் கைத்தறி பூங்கா, ரூ.7 கோடி மதிப்பீட்டில் சென்னிமலைக்கு தார் சாலை அமைக்கும் பணி நிறைவேற்றப்பட்டது. குப்பிச்சிபாளையம், பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு, எக்கட்டாம்பாளையம், முகாசிபிடாரியூர் ஆகிய ஊராட்சிகளில் கனவு இல்லம் திட்டத்திலும், விலையில்லா வீட்டுமனை பட்டா திட்டத்திலும் 1000 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
90 விழுக்காடு மானியத்துடன் 1000 கைத்தறிகள் நவீனப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும். தமிழகம் முழுவதும் 50 கைத்தறி குழுமங்கள் அமைக்கப்படும். மொத்த கைத்தறி விற்பனையின் மதிப்பு ரூ.2000 கோடியாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அடுத்த ஐந்தாண்டு திராவிட மாடல் 2.0 ஆட்சியே அமைய, வரும் தேர்தலில் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
