×

தமிழ்நாடு-கேரளம் சோதனை சாவடியில் காவல்துறை பார்வையாளர் ஆய்வு

 

திருப்பூர், ஏப்.7: தமிழ்நாடு-கேரளம் சோதனை சாவடியில் காவல்துறை பார்வையாளர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட அளவில் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அதன்படி காவல்துறை பார்வையாளராக நியமிக்கப்பட்ட ராகுல் ஹெக்டே நேற்று தமிழ்நாடு எல்லையான உடுமலையில் உள்ள தமிழ்நாடு-கேரளம் சோதனை
சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அந்த வழியாக வரும் வாகனங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் வருகை குறித்தும் வாகன சோதனை குறித்தும் தினசரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தேர்தல் அமைதியாக நடைபெற போலீசார் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை கூறினார். ஆய்வின் போது போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Tamil Nadu ,Kerala ,Tiruppur ,Tamil Nadu Assembly ,Election Commission ,
× RELATED காங்கயத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி