×

வீடுபுகுந்து திருட முயன்றவர் கைது

சேலம், ஏப்.8: சேலத்தில் பட்டப்பகலில் வீடுபுகுந்து திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த வள்ளலார் தெரு சின்னமாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் குகன் (52). வீட்டிலிலேயே பிரிண்டிங் பிரஸ் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் இவர் வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஹாலில் உள்ள பொருட்கள் உருட்டுவது போன்ற சத்தம் கேட்டது.

இதனையடுத்து வெளியே வந்து பார்த்போது மர்மநபர் ஒருவர், அங்குள்ள பொருட்களை கலைத்து தேடிக் கொண்டிருந்தார். குகன் சத்தம்போடவே, அந்த நபர் அங்கிருந்து தப்பமுயன்றார். ஆனால் அருகில் இருந்தவர்கள், மர்மநபரை மடப்பி பிடித்து கிச்சிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் வீடுபுகுந்து திருட வந்தது கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பைபாஸ் பகுதியைச் சேர்ந்த தௌலத் (50) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர்.

 

Tags : Salem ,Kugan ,Chinnamariamman Temple ,Vallalar Street ,Kichipalayam, Salem ,
× RELATED போதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மருத்துவர்