×

தெற்கு தொகுதி முழுவதும் ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வேன்

திருப்பூர், ஏப்.8: திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தெற்கு தொகுதிக்கு உட்பட்ட காங்கயம் சாலை அமர் ஜோதி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்குகள் சேகரித்தார். மேலும், அனைத்து தரப்பினரையும் சந்தித்து ஆதரவை திரட்டினார். பிரசாரத்தின் போது வேட்பாளர் தினேஷ்குமார் பேசியதாவது: திருப்பூர் மாநகரில் குப்பை பிரச்னை உள்ளதாக போலியாக பிரசாரம் செய்கிறார்கள். இந்த பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடாது.

மாநகராட்சியில் குப்பைகளை கையாளுவதற்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதன் காரணமாக மாநகார் முழுவதும் குப்பைகள் தேக்கமின்றி சேகரிக்கப்பட்டு வருகிறது. குப்பைகள் கொட்டப்பட்ட இடமும் சுத்தம் செய்யப்பட்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டது. குப்பை பிரச்னைக்கு குட்பை சொல்லிவிட்டோம்.இதுபோல் லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைத்து வருகிறது. மக்களின் அமோக ஆதரவால் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தெற்கு தொகுதி முழுவதும் ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வேன்.

தமிழகத்திலேயே முன்மாதிரியான தொகுதியாக திருப்பூர் தெற்கு தொகுதி காணப்படும் என்றார்.

Tags : Tiruppur ,Southern Constituency Dimuka ,Dinesh Kumar ,Amar Jyoti Garden ,Gangayam Road ,
× RELATED வீட்டு பத்திரத்தை தொலைத்த வங்கிக்கு...