×

தோகைமலை அருகே புதிய நேரடி கொள்முதல் நிலையம் அமைப்பு

*விவசாயிகள் மகிழ்ச்சி

தோகைமலை : தோகைமலை அருகே சின்னைப்பனையூரில் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையம் அமைத்து வருவதால் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நெய்தலூர் ஊராட்சியில் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து அமைத்து வருகின்றனர்.

தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், முதலைபட்டி, சேப்ளாப்பட்டி ஆகிய 3 ஊராட்சிகள் ஆற்றுபாசனமாக உள்ளது. மேலும் தோகைமலை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள ஊராட்சி கிராமங்கள் குளம் மற்றும் கிணற்றுப்பாசன பகுதியாகவும் உள்ளது.

இந்த பகுதிகளில் விவசாயிகள் அதிகமாக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை திருச்சி, மணப்பாறை, கரூர், நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தனர்.

அப்போது இடைதரகர்கள் மூலம் குறைந்தவிலைக்கு விற்பனை நடைபெற்று வந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துவந்தனர்.இதனால் தோகைமலை பகுதிகளில் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து, இடைதரகர்கள் இல்லாமல் அரசு நிர்ணயம் செய்யும் விலைக்கே விவசாயிகளிடம் இருந்து நெல்லை பெறவேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதனையடுத்து குளித்தலை எம்எல்ஏமாணிக்கம் முயற்சியால் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்தலூர் ஊராட்சி சின்னப்பனையூரில் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நெய்தலூர் ஊராட்சி சின்னப்பனையூர் பகுதியில் தமிழ்நாடுஅரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் சம்பாசாகுபடி மற்றும் கோடை (குறுவை) சாகுபடியின் அறுவடை காலங்களை ஒட்டி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு சம்பா பருவத்தில் அறுவடை செய்த விவிசாயிகள் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யும் போது 2 ரகங்களாக நெல்லைகொள்முதல் செய்தனர். இதில் அரசுநிர்ணய விலையாக சண்ணரகம் (கிரேடு ஏ) ஒரு கிலோ ரூ. 25.45பைசாவிற்கும், மோட்டா (பெரியதுகிரேடுசி) ரகம் ஒருகிலோ ரூ. 25 பெறப்பட்டது.

நெல்லின் ஈரப்பதம் நிர்ணயிக்கப்பட்டதோடு, நெல்லில் இருந்து கரிமம் மற்றும் கணிமம் தரம்பார்த்து எடுக்கப்பட்டது. ஒரு மூட்டைக்கு சாக்குடன் 40.580 கிலோவிற்கு மிகாமல் எடுக்கப்பட்டு அதில் 14 சுத்துதையல் அமைக்கப்பட்டது.

இங்கு விவசாயிகள் தங்களது நெல்லைகொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் நேரடியாக வந்து முன்பதிவு செய்தனர். நேரடியாக வந்து முன்பதிவு செய்த 215 விவசாயிகளுக்கு பதிவு வரிசைப்படி கொள்முதல் செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 39 ஆயிரத்து 546 நெல் மூட்டைகளைபெற்றனர்.

கொள்முதல் செய்யப்பட்ட் அனைத்து விவசாயிகளுக்கும் 3 நாட்களில் வங்கிகணக்கில் பணம் வரவுவைக்கப்பட்டது. இந்த ஆண்டு அறுவடை பருவகாலம் நிறைவு பெற்றதால் தமிழ்நாடு அரசின்கொள்முதல் நிலையம் மூடப்பட்டது.

இதனால் இந்த ஆண்டு விவசாயிகள் எதிர்பார்த்த விலைக்கு தமிழ்நாடு அரசுநெல்லை கொள்முதல் செய்ததால் விவசாயிகள் அனைவரும் தமிழ்நாடுஅரசுக்கும், குளித்தலை எம்.எல.ஏ.மாணிக்கத்திற்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Tags : Thogaimalai ,Tamil Nadu government ,Chinnaippanaiyur ,Karur ,
× RELATED இல்லத்தரசி திட்ட அறிவிப்பால் இலக்கு 200...