×

இடைப்பாடியில் 122 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்

இடைப்பாடி, பிப்,19:  இடைப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சமூக நலத்துறை சார்பில் தாலிக்கும் தங்கம்  வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் குப்பம்மாள் மாதேஷ் தலைமை  வகித்தார். பிடிஓ  சிரஜ்தின் வரவேற்றார். முன்னாள் நகர்மன்ற தலைவர் கதிரேசன், அதிமுக  ஒன்றிய செயலாளர்கள் (வடக்கு) மாதேஷ், (கிழக்கு) மாதேஸ்வரன், இடைப்பாடி  அதிமுக  நகர செயலாளர் முருகன், சேலம் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் கார்த்திகா  ஆகியோர் கலந்துகொண்டு, நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதியை சேர்ந்த 122  பேருக்கு தாலிக்கு தங்கமாக 8 கிராம் தங்கம் வழங்கினர். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு  உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், அரசு  அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : women ,Tali ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...