×

டிரைவர் தற்கொலை

 

பவானி,ஏப்.6: பவானி அருகே வர்ணபுரம், 4-வது வீதியைச் சேர்ந்தவர் பரத் (24).டிரைவர். இவரது மனைவி சண்முகப்பிரியா (22). இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனால், பரத் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Bhavani ,Bharat ,4th Street, Varnapuram ,Shanmugapriya ,
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு