- Kodanadu
- கோத்தகிரி
- கொடனாடு சீனிக் எண்ட்
- ஈஸ்டர்
- கொடனாடு காட்சி
- அருகில் கோத்தகிரி
- கோத்தகிரி நகர் பகுதி
- தமிழ்நாடு சுற்றுலாத் துறை
கோத்தகிரி,ஏப்.6: ஈஸ்டர் பண்டிகை விடுமுறையையொட்டி கொடநாடு காட்சி முனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு காட்சி முனை கோத்தகிரி நகர் பகுதியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் அங்கீகரிக்கப்பட்டு வனத்துறையினர் கட்டுப்பாட்டில் கொடநாடு காட்சி முனை செயல்பட்டு வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் வகையில் சீரான தட்ப வெப்ப நிலையில் அமைந்துள்ள கொடநாடு காட்சி முனை பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்திருந்தனர்.
அவர்கள் இங்கு நிலவும் இதமான கால நிலையை அனுபவித்தனர். கர்நாடக எல்லை பள்ளத்தாக்குகளையும், பவானிசாகர் அணையின் காட்சியையும் கண்டு ரசித்தனர். தங்களின் சுற்றுலா நினைவுகளை புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
