ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது லீக் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றுது. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. 5 விக்கெட் இழப்பிற்கு 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி லக்னோ அணி வெற்றி பெற்றது.
