- சமீர்
- மும்பை
- ஐபிஎல் 8 வது
- தில்லி
- புது தில்லி
- ஐபிஎல் டி 20
- ஐபிஎல் 19
- மும்பை இந்தியர்கள்
- தில்லி தலைநகரம்
புதுடெல்லி: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் நேற்று, டெல்லி அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. ஐபிஎல் 19வது தொடரின் 8வது போட்டி, டெல்லியில் நேற்று நடந்தது. அதில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா களமிறங்கினர். 3வது ஓவரை வீசிய முகேஷ் குமாரிடம், ரையான் ரிக்கெல்டன் (9 ரன்) வீழ்ந்தார். பின் வந்த திலக் வர்மா ரன் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன் பின் இணை சேர்ந்த ரோகித் சர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். 10வது ஓவரில் ரோகித் (26 பந்து, 35 ரன்) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஷெர்பேன் ரூதர்போர்டு 5, சூர்யகுமார் யாதவ் 51, நமன் திர் 28 ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். 20 ஓவர் முடிவில் மும்பை, 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில், முகேஷ் குமார் 2, லுங்கி நிகிடி, அக்சர் படேல், விப்ரஜ் நிகாம், நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் கே.எல்.ராகுல், பதும் நிஸங்கா களமிறங்கினர். தீபக் சஹர் வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட் இழந்து, ராகுல் ஏமாற்றினார்.
அடுத்து வந்த நிதிஷ் ராணாவை ரன் எடுக்காமல், ஜஸ்பிரித் பும்ரா ரன் அவுட் செய்தார். அதையடுத்து, நிஸங்கா உடன், முகேஷ் குமாருக்கு மாற்றாக இம்பேக்ட் வீரராக அனுப்பப்பட்ட சமீர் ரிஸ்வி இணை சேர்ந்தார். சிறப்பாக ஆடி 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையில், நிஸங்கா, மிட்செல் சான்ட்னர் பந்தில் வீழ்ந்தார். இருப்பினும், சமீர் ரிஸ்வி அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்துகளில் 4 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் அரைசதம் எட்டினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சமீர் (51 பந்து, 7 சிக்சர், 7 பவுண்டரி, 90 ரன்), 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் அமைத்து தந்த வலுவான அடித்தளத்தால், டெல்லி, 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன் விளாசி 6 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது.
