×

பனியன் தொழிலாளர்களிடம் 100% வாக்களிக்கும் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு

திருப்பூர், ஏப். 5: திருப்பூர் வடக்கு வட்டம் வேலம்பாளையம் உள்ள வட்டம் செட்டிபாளையம் கிராமத்தில் தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 400 பேர் பணியாற்றி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலையொட்டி நேற்று இங்குள்ள பணியாளர்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுபோல் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாடி வரும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்களின் பெற்றோர் ஆகியோர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக துண்டு பிரசுரம் கொடுத்து மற்றும் வீடியோ பதிவுகள் மேற்கொண்டு வாட்ஸ்ஆப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் வருவாய் ஆய்வாளர் இளையராஜா மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Banyan ,Tiruppur ,Chettipalayam ,Velampalayam, ,Velampalayam, Tiruppur North taluk ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் திருப்பூர் மேயர் ராஜினாமா