- திருப்பூர்
- திருப்பூர் மாவட்டம்
- Tarapuram
- காங்கேயம்
- அவிநாசி
- வடக்கு
- தெற்கு
- பல்லடம்
- உடுமலை
- மடத்துக்குளம்.…
திருப்பூர், ஏப்.5: வாக்கு எண்ணும் மையத்தில் பொது பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார். சட்டமன்ற பொதுத்தேர்தல் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தேர்தல் பொதுப்பார்வையாளர் தர்மேந்திர சிங், திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் திருப்பூர் (தெற்கு) மற்றும் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் மையங்கள், தேர்தல் மேற்பார்வையாளர்கள் அறை, ஊடக மையம் ஆகியவை அமைய உள்ள இடங்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வாதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் அமித், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கண்ணன் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) கனகராஜ் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
