×

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து தயக்கமின்றி புகார் அளிக்கலாம்

பெரம்பலூர்,ஏப்.5: பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து தயக்கமின்றி புகாரளியுங்கள். உங்கள் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: வருகிற 23ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை சுமுகமாகவும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்திட ஏதுவாக இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேர்தரல் நடத்தை விதி மீறல்கள் குறித்த தகல்களை தெரிவிக்க பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களோ, அரசியல் கட்சியினரோ தேர்தல் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் “1800 599 4402”- இல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

புகார் அளித்தவரின் பெயர் வெளிப்படாமல் புகாரளித்திட ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையம் cVIGIL என்ற மொபைல் செயலியை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக நடத்தை விதிமீறல், வாக்காளர்களை லஞ்சம் வழங்கி கவருதல், அச்சுறுத்துதல் தொடர்பான புகார்களை மொபைல் போனில் நிகழ்நேரத்தில் புகைப்படம், வீடியோ, ஆடியோவாக பதிவு செய்து புகாரளித்திடலாம். மேலும் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை ”1950” என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களுக்கும் உரியநேரத்தில் தீர்வுகாணவும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களைக் கண்டறியவும் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும், 148 குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும், பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்புக் குழுவினரும் வாகனத் தணிக்கை மற்றும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள மேற்கண்ட அனைத்து வசதிகளையும் தயக்கமின்றி பயன்படுத்தி தேர்தலை நடத்திட முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

Tags : Perambalur ,District ,Officer ,Mrinalini ,
× RELATED அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள்