×

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன பேரணி

ஜெயங்கொண்டம், ஏப். 3: ஜெயங்கொண்டத்தில் 100 சதவீத வாக்களிப்பதை வலியுறுத்தி இருசக்கர வாகன பேர பேரணியை உடையார்பாளையம் ஆர்டிஓ தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன் துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டத்தில் வருவாய் துறை காவல்துறை இணைந்து 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இரு சக்கர வாகன பேரணி நடத்தினர். பேரணிக்கு ஜெயங்கொண்டம் டிஎஸ்பி தினேஷ் குமார் தலைமை வகித்தார்.

ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தவேல், ஆண்டிமடம் தாசில்தார் சுசீலா ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணியை நடைபெற்றது. பேரணியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

பேரணியானது ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக துவங்கி அண்ணா சிலை கடைவீதி நான்கு ரோடு சின்ன வளையம் வரை சென்று பைபாஸ் சாலையில் திரும்ப நான்கு ரோடு வந்து கும்பகோணம் சாலை வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. பேரணியில் ஜெயங்கொண்டம் காவல்துறை இன்ஸ்பெக்டர் பாலாஜி, நகராட்சி துப்புரவு அலுவலர் பூபதி, துப்புரவு ஆய்வாளர் பாபு, காவல் துறையினர், வருவாய்த்துறை மற்றும் நகராட்சி துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். இறுதியில் வட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் நன்றி தெரிவித்தார்.

 

Tags : Jayankondam ,Udayarpalayam ,RTO ,Election Officer ,Manoharan ,Jayankondam… ,
× RELATED 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன பேரணி