- தேர்தல் பார்வையாளர்
- அரியலூர்
- சட்டமன்ற தொகுதி
- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026
- 149-அரியலூர் சட்டமன்றத் தொகுதி
- பிரியங்கா சிங்லா
- வாரணாசி
- அரியலூர் சட்டமன்றத் தொகுதி…
அரியலூர், ஏப்.2: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு 149-அரியலூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகளை 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரியங்கா சிங்லா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட வாரணவாசி ஊராட்சியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி 141, 143 மற்றும் வாரணவாசி சமத்துவபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி 142 மற்றும் கீழப்பழுவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகள் உள்ளிட்டவைகளை அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் பார்வையிட்டு வாக்குச்சாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகள், அமைவிடம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
