×

ஆலத்தூர் தாலுகாவில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும்: தேர்தல் காவல் பார்வையாளர் உத்தரவு

பாடாலூர், ஏப்.5: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது சரியான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லை என்று கூறப்பட்டது. இதனால் தேர்தல் நேரங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கடும் சிரமம் ஏற்படும் என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். உடனே அந்த இடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து, நேற்று ஆலத்தூர் தாலுகாவில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் காவல் பார்வையாளர் அனூப் ஏ ஷெட்டி நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக அல்லிநகரம், சில்லக்குடி, கூத்தூர், பாடாலூர், செட்டிகுளம், கண்ணப்பாடி ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம், வாக்குச்சாவடி மையத்தில் உள்ள கழிப்பறை, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம், வாக்குப்பதிவின் போது எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாதவாறு முன்கூட்டியே, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

 

Tags : Alathur taluka ,Badalur ,Perambalur district ,
× RELATED 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன பேரணி