- அரியலூர், ஜெயங்கொண்டம்
- அரியலூர்
- அரியலூர் மாவட்டம்
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026
- 149-அரியலூர்
- சட்டசபை
- ஓம் பிரகாஷ் திரிபாதி
- தேர்தல் போலீஸ் பார்வையாளர்
- 150-ஜெயங்கொண்டம்
அரியலூர், ஏப்.5: அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை 149-அரியலூர் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் ஓம் பிரகாஷ் திரிபாதி, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதையொட்டி அரியலூர் மாவட்டம், 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி, திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள ஏழு வாக்குச்சாவடி மையங்களான 228, 229, 230, 231, 232, 233 மற்றும் 234 ஆகிய வாக்குச் சாவடி மையங்களையும் மற்றும் கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களான 147, 148, 149 மற்றும் 151 ஆகிய வாக்குச்சாவடி மையங்களை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் பார்வையிட்டார்.
அப்போது வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களாகிய பொதுமக்களுக்கு மின்சாரவசதி, குடிநீர் வசதி, சாய்வுதள வசதி, கழிவறை வசதிகள் உள்ளிட்டவை குறித்தும், மேலும் வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு வசதிகள், போதிய இடவசதிகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அரியலூர் வட்டாட்சியர் தேவகி, 1அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
