×

பேரன் வீட்டிற்கு சென்ற முதியவர் சடலமாக மீட்பு

சேலம், ஏப்.5: சேலம் சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜாகவுண்டர் (83). இவர் கடந்த 31ம் தேதி தாரமங்கலத்தில் உள்ள பேரன் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்தவர் திடீரென காணாமல் போய் விட்டார். இதையடுத்து அவரை தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் சேலம் வேடுகத்தாம்பட்டி அரசு பள்ளி அருகில் ராஜாகவுண்டர் நேற்று இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Salem ,Rajagounder ,Seelanayakkanpatti Mariamman Kovil ,Tharamangalam ,
× RELATED ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா