சென்னை: ஏழைகள் பயன்பெறக்கூடாது என்பதற்காக கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ அமைப்பினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளை முடக்க முயற்சி. ஒன்றிய அரசு சட்டத்திருத்தத்தால் எவ்வித காரணமுமின்றி சிறுபான்மையின நிறுவனங்களை முடக்க முடியும் என்று சிறுபான்மையினருக்கு எதிரான FCRA சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி வில்சன் விளக்கம் அளித்துள்ளார்.
