சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் நடைபெற்று வரும் 4-ம் கட்ட சீரமைப்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு, ரயில் சேவைகளின் இயக்க முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடைமேடைகளில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் சேவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள்:
*ரயில் எண் 12632 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் ‘நெல்லாய் எக்ஸ்பிரஸ்’ ரயில், 2026 ஏப்ரல் 06 முதல் ஏப்ரல் 21 வரை தாம்பரத்தில் பாதியிலேயே நிறுத்தப்படும். தாம்பரம் வந்தடையும் நேரம் 06.25 மணி ஆகும்.
*ரயில் எண் 16752 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், 2026 ஏப்ரல் 06 முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் பாதியிலேயே நிறுத்தப்படும். தாம்பரம் வந்தடையும் நேரம் 07.10 மணி ஆகும்.
*ரயில் எண் 12760 ஹைதராபாத் – தாம்பரம் ‘சார்மினார் எக்ஸ்பிரஸ்’ ரயில், 2026 ஏப்ரல் 05 முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பாதியிலேயே நிறுத்தப்படும். தாம்பரம் வந்தடையும் நேரம் 07.00 மணி ஆகும்.
ரயில் சேவைகள் புறப்படும் இடத்தில் மாற்றம்:
*”ரயில் எண் 12661 சென்னை எழும்பூர் – செங்கோட்டை ‘பொதிகை எக்ஸ்பிரஸ்’ ரயில், 2026 ஏப்ரல் 07 முதல் ஏப்ரல் 22 வரை தாம்பரத்திலிருந்து புறப்படும். தாம்பரத்திலிருந்து புறப்படும் நேரம் 20.05 மணி ஆகும்.
*ரயில் எண் 16751 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில், 2026 ஏப்ரல் 07 முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்திலிருந்து புறப்படும். தாம்பரத்திலிருந்து புறப்படும் நேரம் 21.05 மணி ஆகும்.
*ரயில் எண் 12759 தாம்பரம் – ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரயில், 2026 ஏப்ரல் 06 முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் நேரம் 18.20 மணி ஆகும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
