லாலாபேட்டை, ஏப். 2: கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட போத்து ராவுத்தன்பட்டி ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்தை அடுத்து குடிநீர் தேவை அதிகரித்தது. மேலும் கோடைகாலங்களில் குடிநீர் தேவை மேலும் அதிகரித்தது. இதனையடுத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்று தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் மதிப்பில் 10,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கட்டிக்கொடுத்து இஅந்தப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தது. தங்களின் கோரிக்கையை ஏற்று குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை கட்டி தந்த திராவிட மாடல் அரசிற்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.
