×

பிறப்புரிமை குடியுரிமை ரத்து வழக்கு விசாரணையை பார்க்க நீதிமன்றம் வந்தார் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற முதல் நாளிலேயே பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இதன் மூலம் அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ, தற்காலிகமாகவோ வசிக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் அமெரிக்க குடியுரிமையை பெற முடியாது. இந்த உத்தரவு அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தத்திற்கு எதிரானது என்று கீழ் நீதிமன்றங்கள் தடை விதித்தன. இதை எதிர்த்து டிரம்ப் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது. இதைப் பார்க்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிபர் டிரம்ப் நேரில்வந்தார். பதவியில் இருக்கும் அதிபர் விசாரணையில் பங்கேற்பது இதுவே முதல் முறை.

Tags : Trump ,Washington ,US President ,United States ,US ,
× RELATED மாற்று பாதையை தேர்வு செய்த சவுதி...