×

திடீர் ஆட்குறைப்பு 12,000 இந்தியர்கள் பணிநீக்கம் ஆரக்கிள் நிறுவனம் நடவடிக்கை

நியூயார்க்: அமெரிக்காவில் 2டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் உலக அளவில் ரூ.30ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 12ஆயிரம் ஊழியர்களை நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இந்தியாவில் ஆரக்கிள் நிறுவனத்தில் மொத்தம் 40 ஆயிரம் பேர் பணியாற்றி வந்த நிலையில் அவர்களில் 30 சதவீதம் பேர் வேலையை இழந்துள்ளனர்.

ஒரு மாதத்திற்குள் மேலும் ஒரு ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பணி நீக்கம் தொடர்பாக ஆரக்கிள் நிறுவனமானது மார்ச் 31ம் தேதி காலை 6 மணியளவில் ஊழியர்களுக்கு மின்னஞ்சலை அனுப்பத்தொடங்கியுள்ளது. இந்த பணிநீக்க கடிதத்தை ஊழியர்கள் சிலர் ரெட்டிட் போன்ற தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த ஊழியர்களின் தகவலின்படி, ஆரக்கிள் நிறுவனம் ஊழியர்கள் உடனடியாக நீக்கப்படுவதாக நேரடியாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே நிறுவனத்தின் சாதனங்கள், மின்னஞ்சல் மற்றும் உள்ளகக் கோப்புகள் உள்ளிட்ட அனைத்து நிறுவன அமைப்புகளுக்கான அணுகலையும் ஆரக்கிள் நிறுவனம் துண்டிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Oracle ,Indians ,New York ,Austin, Texas ,India ,
× RELATED பிறப்புரிமை குடியுரிமை ரத்து வழக்கு...