×

2027ம் நிதியாண்டிற்கான எச்-1பி விசா ஒதுக்கீடு நிறைவு

வாஷிங்டன்: 2027ம் நிதியாண்டிற்கான எச்-1பி விசா ஒதுக்கீடு செயல்முறைகள் முடிவடைந்திருப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா மூலம் பெரும்பாலும் இந்திய ஐடி ஊழியர்கள் மற்றும் மருத்துவகளே அதிகளவில் பயனடைகின்றனர். 2027ம் நிதியாண்டிற்கான வழக்கமான ஒதுக்கீடு வரம்பு 65,000 விசாவாகும். இதுதவிர, அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு கூடுதலாக 20,000 எச்-1பி விசா வழங்கப்படும்.

இதற்கான போதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, குலுக்கல் முறை நடத்தி 85,000 விசாதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை நேற்று அறிவித்துள்ளது. இம்முறை அதிக சம்பளம், சிறந்த திறன்களைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முறையாக அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் வரும் ஜூன் 30ம் தேதி வரை 90 நாட்களில் முழுமையான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். இம்முறை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கட்டண விதிமுறைப்படி, வெளிநாடுகளில் இருந்து பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில சூழல்களில் 1 லட்சம் அமெரிக்க டாலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Washington ,US Citizenship and Immigration Services Department ,United States ,
× RELATED மாற்று பாதையை தேர்வு செய்த சவுதி...