×

லக்னோவுக்கு எதிரான டி20 போட்டியில் டெல்லி அணி அசத்தல் வெற்றி

லக்னோ: ஐபிஎல் 19வது தொடரின் 5வது போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. அதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்து வீசியது. அதையடுத்து லக்னோ அணியின் துவக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ், கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினர். துவக்கம் முதல் திணறலுடன் ஆடிய ரிஷப், 7 ரன்னில் ரன்அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த அதிரடி வீரர் அய்டன் மார்க்ரம் 11 ரன்னில் அக்சர் படேலிடம் கிளீன் போல்டானார். அவரைத் தொடர்ந்து ஆயுஷ் படோனி ரன் எடுக்காமல், நடராஜனின் வேகத்துக்கு பலியாகி நடையை கட்டினார். அதன் பின் வந்த நிகோலஸ் பூரனை 8 ரன்னுக்கு லுங்கி நிகிடி கிளீன் போல்ட் செய்தார். அதுவரை நிலைத்து ஆடிக் கொண்டிருந்த மிட்செல் மார்ஷ் (35 ரன்), குல்தீப் யாதவ் பந்தில் ஸ்டப்ஸிடம் கேட்ச் தந்து அவுட்டானார்.

டெல்லி பவுலர்களின் சாதுரிய பந்து வீச்சால், லக்னோ, 10 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. அதன்பின் லக்னோ 100 ரன்கள் கடந்த நிலையில், 14வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், குல்தீப் சவுத்ரியை (14 ரன்), வீழ்த்தினார். 18வது ஓவரை வீசிய நடராஜன், அப்துல் சமத் (36 ரன்), முகம்மது சமி (1 ரன்), ஆகியோரை அவுட் செய்தார். அடுத்த ஓவரை வீசிய லுங்கி நிகிடி, ஆன்ரிச் நார்ட்ஜே, மோஷின் கானை ரன் தராமல் வீழ்த்தினார். 18.4 ஓவரில், லக்னோ, 141 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 6 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இதில் சமீர் ரிஸ்வி அதிகபட்சமாக 70 ரன்கள், ஸ்டப்ஸ் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Tags : Delhi ,T20 ,Lucknow ,IPL 19th ,Lucknow Super Giants ,Delhi Capitals ,Mitchell Marsh ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி..!