×

டெல்லி – லக்னோ இன்று மோதல்: வெற்றியுடன் ஆரம்பிக்க போவது யார்?

லக்னோ: ஐபிஎல் தொடரில் லக்னோ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30மணிக்கு நடைபெறும் 5வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதுகின்றன. ரிஷப் பன்ட் தலைமையிலான லக்னோ கடந்த சீசனில் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 7வது இடத்தை பிடித்தது. பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், மார்க்ரம், ஆயுஷ் படோனி என தரமான வீரர்கள் உள்ளனர். பவுலிங்கில் 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் மயங்க் யாதவ் காயத்தில் இருந்து மீண்டு வந்து அச்சுறுத்த காத்திருக்கிறார். முகமது ஷமி, ஆவேஷ்கான், சுழலில் ஹசரன்கா வலு சேர்க்கின்றனர்.

மறுபுறம் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி கடந்த சீசனில் 5வது இடத்தை பிடித்து பிளே ஆப் வாய்ப்பை கோட்டைவிட்ட நிலையில் இந்த முறை சாதிக்கும் உத்வேகத்தில் உள்ளது. பேட்டிங்கில் கே.எல்.ராகுல், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், மதும் நிசாங்கா, அபிஷேக் போரல் அசத்தலாம். பவுலிங்கில் லுங்கி இங்கிடி, முகேஷ்குமார், டி.நடராஜன், சுழலில் குல்தீப் யாதவ் நம்பிக்கை அளிக்கின்றனர். ரூ. 8.4 கோடிக்கு வாங்கி உள்ள ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஆகிப் நபி மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இரு அணிகளும் இதற்கு முன் 7 முறை மோதி உள்ளன. இதில் 4ல் டெல்லி, 3ல் லக்னோ வென்றுள்ளது.

Tags : Delhi ,Lucknow ,Delhi Capitals ,Lucknow Supergiants ,IPL ,Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium ,Rishabh Pant ,
× RELATED ஐபிஎல் தொடர் குஜராத்தை வீழ்த்திய பஞ்சாப் அணி