×

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை அபிஷேக் சர்மா மீண்டும் நம்பர் 1

துபாய்: ஐசிசி டி20 ஆடவர் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் அபிஷேக் சர்மா, இஷான் கிஷண், தொடர்ந்து முதல் மற்றும் 2ம் இடங்களில் மாற்றமின்றி நீடித்து வருகின்றனர். ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. அதில், இந்திய வீரர் அபிஷேக் சர்மா 875 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இஷான் கிஷண் 871 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். பாக். வீரர் சாஹிப்ஸதா ஃபர்ஹான் 3, இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 4, இலங்கையின் பதும் நிசாங்கா 5, இந்திய வீரர்கள் திலக் வர்மா 6, சூர்யகுமார் யாதவ் 7வது இடங்களில் மாற்றமின்றி தொடர்கின்றனர். இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் ஒரு நிலை உயர்நது 8ம் இடத்தையும், நியூசிலாந்தின் டிம் செபெர்ட் ஒரு நிலை தாழ்ந்து 9வது இடத்தையும் பிடித்துள்ளனர். தென் ஆப்ரிக்காவின் டெவால்ட் புரூவிஸ் 10ம் இடத்தில் நீடிக்கிறார்.

Tags : ICC T20 ,Abhishek Sharma ,Dubai ,Ishan Kishan ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி..!