×

முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விரைவில் தாக்குதல்.!! ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை

மேற்காசிய நாடுகள் போர் சூழலில் சிக்கி உள்ள நிலையில் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் புரட்சிகர காவல் படையும் களத்தில் இறங்கி உள்ளது. மேற்காசியாவில் உள்ள அமரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களே இனி தங்களது இலக்கு என தெரிவித்து உள்ளது.

மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள், இன்டெல், ஐபிஎம் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட 18 அமரிக்க நிறுவனங்களுக்கு ஈரானின் புரட்சிகர காவல் படை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கள் நாட்டின் மீதான தாக்குதலில் ஏஐ தொழில்நுட்பத்தை அமெரிக்கா பயன்படுத்துவதாக ஈரான் கருதுகிறது. ஈரானிய உயர் அதிகாரிகளைக் குறிவைக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்ற தங்களின் தொடர் எச்சரிக்கைகளை அமெரிக்க அரசும், அந்நாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களும் புறக்கணித்துவிட்டதாக சாடியுள்ள ஈரான் காவல் படை, தங்கள் நாட்டில் அத்துமீறி நிகழ்த்தப்பட்டு வரும் படுகொலைகளைத் திட்டமிடுவதிலும் கண்காணிப்பதிலும் பட்டியலிடப்படுள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும் புரட்சிகரப் பாதுகாப்புப் படை குற்றம் சாட்டி உள்ளது.

இதன் காரணமாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தற்போது ஈரான் தரப்பு தாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தாக்குதல் எச்சரிக்கை உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஈரான் புரட்சிகர காவல் படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரானில் நடைபெறும் ஒவ்வொரு படுகொலைக்கும் பதிலடியாக, அமெரிக்க நிறுவனங்ககள் மீது இனி தாங்கள் பட்டியலிட்டுள்ள 18 அமெரிக்க நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதை அவர்கள் எதிர்பார்க்க வேண்டும். இந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் உயிரை பாதுகாக்கும் பொருட்டு, உடனடியாக தாங்கள் பணியை விட்டு வெளியேற நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்றும் அந்த அறிக்கையில் ஈரான் புரட்சிகர காவல் படை கேட்டு கொண்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தாங்கள் பட்டியலிட்டுள்ள அமெரிக்க நிறுவனங்களை “பயங்கரவாத நிறுவனங்கள்” என்று முத்திரை குத்தியுள்ள ஈரான் புரட்சிகர காவல்படை, இந்நிறுவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், குறிப்பிட்ட பகுதியிலிருந்து “ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு அப்பால்” சென்று, பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே போர் துவங்கிய சில மணி நேரங்களிலேயே ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி முகமது பக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்லாமியக் குடியரசின் சக்திவாய்ந்த பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியும், மேலும் பல முக்கிய பிரமுகர்களும் கூட கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : US ,Iran ,Revolutionary Guard Force ,IRAN'S REVOLUTIONARY POLICE FORCE ,UNITED STATES ,WEST ASIAN ,West Asia ,Microsoft ,
× RELATED ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்