×

அரியலூரில் பல்வேறு கட்சியை சேர்ந்த 700 பேர் திமுகவில் ஐக்கியம்

அரியலூர், ஏப்.1: அரியலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக, பாமக, தமாகா, அமமுக என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 700 பேர் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அப்போது அவர் கூறும்போது, திமுக தேர்தல் அறிக்கை எப்போதும் மக்கள் மனம் கவர்ந்த அறிக்கையாகவே இருக்கும்.

அதே போல் இந்த ஆண்டும் எல்லாவற்றிற்கும் கிரீடம் வைத்தது போன்ற ஒரு தேர்தல் அறிக்கையாக, மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைத் தொகுத்து வழங்கிய அறிக்கையாக இது அமைந்துள்ளது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள் மற்றும் முதல்வரின் மீதான அன்பின் காரணமாகவே இந்த இணைவு நடைபெற்றுள்ளது.

இது போன்ற மாற்றுக் கட்சியினர் முதல்வரின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மூலம் பயனடைந்ததால் திமுகவில் தமிழக முழுவதும் இணைந்து வருகின்றனர். இந்த தேர்தலில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில்,வேட்பாளர் லதாபாலு மற்றும் ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

 

Tags : DMK ,Ariyalur ,AIADMK ,PMK ,TMA ,AMMK ,Minister ,S.C. Sivashankar ,DMK… ,
× RELATED டி.களத்தூர் அரசு பள்ளியில் ஆண்டு விழா...