×

மகாவீர் ஜெயந்தி இறைச்சிக்கடைகள் மூடல்

பெரம்பலூர்,ஏப்.1: பெரம்பலூரில் நேற்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சமண சமயத்தின் 24ஆவது திருத்தங்கரரும், இறுதித் திருத்தங்கரருமான மகாவீரரின் பிறந்தநாள் விழாவான (மகாவீரர் ஜெயந்தி) மார்ச் 31ஆம் தேதியை இந்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

அதே நாளில் மகாவீரரின் மது அருந்தக்கூடாது, புலால் உண்ணக்கூடாது என்று வகுத்துத்தந்த நெறிகளின் படி, தமிழக அரசு அனைத்து மதுபான கடைகளுக்கும், இறைச்சிக் கடைகளுக்கும் விடுமுறை அளித்திருந்தது. இதனையொட்டி நேற்று பெரம்பலூர் நகரில் மற்றும் மாவட்டத்திலுள்ள முக்கிய ஊர்களில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.

 

Tags : Mahavir Jayanti ,Perambalur ,Indian government ,Mahavir ,Jainism ,
× RELATED அரியலூரில் பல்வேறு கட்சியை சேர்ந்த 700 பேர் திமுகவில் ஐக்கியம்