சேலம், ஏப்.1: சேலம் மாவட்டம் ஆத்தூர் சதாசிவபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் தனுஷ் (21). இவர், கடந்த 29ம் தேதி இரவு 8.45 மணியளவில் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்து பஸ் வெளியேச் செல்லும் சாலையில் நடந்துச் சென்றபோது, 2 வாலிபர்கள் வந்து, அவரிடம் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் இல்லை எனக்கூறியபோது, அவர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு, 2 பேரும் ஓட்டம் பிடித்துள்ளனர். சிறிது தூரம் விரட்டிச் சென்றும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதுபற்றி பள்ளப்பட்டி போலீசில் தனுஷ் புகார் கொடுத்தார். எஸ்ஐ நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.
