×

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

கெங்கவல்லி, மார்ச் 29: கெங்கவல்லி அருகே கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் மகன் தினேஷ்(25). இவர் பி.டெக்., படித்து விட்டு எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியமூர் பகுதியைச் சேர்ந்த மணி மகள் உஷா(21). இவர் தலைவாசலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ., இறுதியாண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு சிறப்பு பேராசிரியராக சென்ற தினேஷூடன், உஷாவுக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனை அறிந்த உஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். இருவரது பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உஷாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தினேஷூடன் உஷாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags : Kengavalli ,Dinesh ,Senthil ,Kadambur ,Usha ,Mani ,Kaniyamoor ,Kallakurichi district ,Thalaivasal… ,
× RELATED ரயில்களில் தீ பற்றும் பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்