×

சுட்டெரிக்கும் வெயில் போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கல்

சேலம், மார்ச்29: சேலத்தில் வெயில் சுட்டெரிப்பதால் போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர காவல்துறையில் 120க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் காலை முதல் மாலை வரை என 3 ஷிப்ட்களாக பணியாற்றுகின்றனர். தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் வெயில் கடுமையாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி வழங்கப்படும். இந்த சோலார் தொப்பி அணிந்தால் வெப்பம் தெரியாது. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். எனவே சோலார் தொப்பி போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 97 போலீசாருக்கு இந்த சோலார் தொப்பியை போக்குவரத்து உதவி கமிஷனர் ஜானகிராம் வழங்கினார். இதனை போக்குவரத்து போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் காலை, மதியம், மாலையில் போலீசாருக்கு மோர் வழங்கப்பட உள்ளது.

Tags : Salem ,Salem Metropolitan Police ,
× RELATED ரயில்களில் தீ பற்றும் பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்