×

ராட்சத கிரேனில் திடீர் தீ விபத்து

சேலம், மார்ச் 31: சேலம் சத்திரம் பகுதியில் ரயில்வே கூட்ஸ் ஷெட் இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சிமெண்ட், பருப்பு, உரம், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் சரக்குரயில் மூலம் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நேற்று வந்த சரக்கு ரயிலில் இருந்த கண்டெய்னர்களை, ராட்சத கிரேன் மூலம் லாரிகளில் இறக்கி வைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது ராட்சத கிரேனின் டீசல் டேங்கில் இருந்து திடீரென கரும்புகை வௌிவந்துள்ளது. சிறுது நேரத்தில் மளமளவென தீப்பற்றி எரிந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிரேன் ஆபரேட்டர், சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிரேனில் தீப்பற்றி எரிந்த தீயை, தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Salem ,Salem Chattiram ,Tamil Nadu ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கல்