×

பைனான்சியர் வீடு புகுந்து பணம் திருடிய 4 பேர் கைது

இளம்பிள்ளை, மார்ச் 31: திருப்பூர் மாவட்டம், வஞ்சிவலசு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(51). இவர் மகுடஞ்சாவடி கூடலூர் முத்து முனியப்பன் கோவில் அருகே உள்ள தனியார் அரிசி மில்லில் உள்ள ஒரு அறையில் தங்கி, மகுடஞ்சாவடி சுற்றுவட்டாரத்தில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்து வந்த அவர், கடந்த 22ம் தேதி வெளியே சென்று விட்டு இரவு வழக்கம்போல் போல் தனது அறையில் தூங்கி உள்ளார். மறுநாள் அதிகாலையில், கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து கதவை திறந்ததும், அங்கு 3 பேர் நின்றிருந்தனர். அதில் இருவர் சந்திரசேகரை தள்ளிச்சென்று கட்டில் மேல் படுக்க வைத்து, அமுக்கி பிடித்துக் கொண்டு பணம் எங்கு வைத்திருக்கிறாய் என்று கேட்டுள்ளனர்.

சந்திரசேகர் பதில் சொல்லாததால் ஆத்திரமடைந்த மற்றொரு நபர், டேபிள் மீதிருந்த திருப்புளியை எடுத்து குத்தி கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். அப்போது ஒருவன் டேபிள் டிராவை திறந்து, அதில் வைத்திருந்த ரூ.86 ஆயிரத்தை எடுத்துக்கொண்டனர். பின்னர் சந்திரசேகரின் செல்போனை எடுத்து, அதில் இருந்த சிம் கார்டை கழற்றி கொண்டு, அறையின் கதவை வெளியே தாழ்பாள் போட்டு விட்டு தப்பிச்சென்றனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து வெளியே வந்த சந்திரசேகர், இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் வழக்கு பதிவுசெய்து, திருட்டில் ஈடுபட்ட சேலம் மெய்யனூரை சேர்ந்த அர்ஜூன்(28), ஐந்து ரோடு பிரபு (31), கூடலூர் ஆண்டிபாளையம் கனகா(35) மற்றும் சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களை சங்ககிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Ilampillai ,Chandrashekhar ,Vanjivalasu ,Tiruppur district ,Muthu Muniyappan Temple ,Kudalur, Magudanjavadi ,Magudanjavadi.… ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கல்