- வழக்கறிஞர் மன்றத் தேர்தல்
- திருப்புத்தூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி பார் கவுன்சில்
- திருப்பத்தூர் நீதிமன்றம்
- சிவகங்கை
திருப்புத்தூர், மார்ச் 31: திருப்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னதாக நீதிமன்ற நடுவர்கள் கபிலன் மற்றும் நிவாஸ் ஆகியோர் வாக்குச்சாவடி மையத்தைப் பார்வையிட்டு வாக்குப் பெட்டிக்கு சீல் வைத்தனர்.
தொடர்ந்து வாக்குப் பதிவுகள் நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரியாக வேல்முருகன், மேற்பார்வையாளாரக அருள் தீபக் மனோரஞ்சன், உதவி மேற்பார்வையாளராக வேதநாராயணன், முகமது ஷரீப் ஆகியோரும் உதவியாளர்களாக இந்து, ராகுல், முத்துப்பாண்டி ஆகியோர் தேர்தல் பணியாளர்களாக செயல்பட்டனர். இதில் மொத்தம் 75 வாக்காளர்களில் 71 பேர் வாக்களித்தனர்.
