- அமைச்சர்
- Geethajeevan
- தூத்துக்குடி கடற்கரை
- தூத்துக்குடி
- திமுக
- முத்துநகர் கடற்கரை
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
தூத்துக்குடி, மார்ச் 31: முத்துநகர் கடற்கரையில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன், நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் கீதாஜீவன் நேற்று காலை தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வந்த பொதுமக்களிடம் வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார். அப்போது காங். மாநில துணை தலைவர் சண்முகம், முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், திரேஸ்புரம் பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், வட்ட செயலாளர் மரிய ஹான்ஸ், கவுன்சிலர் எடிண்டா, காங். வட்ட தலைவர் மோகன், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி உள்பட பலர் உடனிருந்தனர்.
