×

சுசீந்திரம் அருகே கார், ஆட்டோ மோதி 4 பேர் படுகாயம்

நாகர்கோவில், மார்ச் 31: நாகர்கோவில் அடுத்த தெற்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் சுதன் (35). ஆட்டோ டிரைவர். கடந்த 28ம் தேதி தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, சுசீந்திரம் அடுத்த குலசேகரன் புதூர் ரயில்வே கேட் அருகில் உள்ள குளத்தங்கரை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதி வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோவில் இருந்த டிரைவர் சுதன், பயணிகள் தொல்லவிளையை சேர்ந்த தங்கம்மாள் (80), லெட்சுமி தேவி, அஞ்சு ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து சுதன் அளித்த புகாரின் பேரில், காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவர் ஆஸாத் நகரை சேர்ந்த நசீர் மகன், அகமது நவ்தீப் (19) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Suchindram ,Nagercoil ,Sudhan ,South Surangudi ,Kulathangarai Road ,Kulasekaran Puthur Railway Gate ,
× RELATED திருச்சி மாவட்ட 9 தொகுதிகளில் ஒரேநாளில் 23 பேர் வேட்பு மனுதாக்கல்