நாகர்கோவில், மார்ச் 31: நாகர்கோவில் மீனாட்சிபுரம் தோப்பு வணிகர் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் அருணா தேவி (25). நாகர்கோவிலில் உள்ள பிரபல ஸ்கேன் சென்டரில் பணியாற்றி வந்தார். கடந்த 28ம் தேதி வேலைக்கு சென்ற அருணா தேவி, பணி முடிந்து வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து அவரது தந்தை முருகேசன், வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அருணாதேவியை தேடி வருகிறார்கள். அவர் பணியாற்றி வந்த ஸ்கேன் சென்டர் மற்றும் அவரது தோழிகளிடம் விசாரித்தனர். அருணா தேவியின் செல்போன் நம்பருக்கு வந்த அழைப்புகளின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.
