பெரிய வெள்ளை வெங்காயம் விற்பனை

ஓமலூர், பிப்.18: ஓமலூரில் நாசிக் நேரடி வெங்காய விற்பனை மண்டி உள்ளது. இங்கு வெளி  மார்க்கெட்டை விட கிலோவிற்கு ₹10 வரை காய்கறி விலை குறைவாக கிடைக்கும். தற்போது பெரிய வெங்காயம் கிலோ ₹55க்கும், சின்ன  வெங்காயம் கிலோ ₹90க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மண்டியில் பெரிய வெள்ளை வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. இது கிலோ ₹40க்கு விற்பனை  செய்யப்படுகிறது. மருத்துவ  குணம்  உள்ளதாக கூறப்படும் இந்த பெரிய வெள்ளை வெங்காயத்தை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.

Related Stories:

>