- தேமுதிக
- விருத்தாச்சலம்
- பிரேமலதா
- விருதுநகர்
- விஜயா பிரபாகர்
- சென்னை
- திமுக
- பொதுச்செயலர்
- தர்மபுரி
- எலங்கோவன்
- சேலம்
- மேற்கு
- அலகாபுரம் மோகன்ராஜ்
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு: விருத்தாசலம் – பிரேமலதா, தர்மபுரி – இளங்கோவன், சேலம் மேற்கு – அழாகபுரம் மோகன்ராஜ், விருதுநகர் – விஜய பிரபாகர், ஓமலூர் – இளங்கோவன், மைலம் – வெங்கடேசன், பல்லாவரம் – அனகை முருகேசன், திருத்தணி – கிருஷ்ண மூர்த்தி, குடியாத்தம் (தனி) – பிரதாப், போளூர் – சரவணன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மீண்டும் விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா இந்த தேர்தலில் களம் காண்கிறார்.
ஏற்கனவே மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2006 போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் அவரது மறைவிற்கு பிறகு மீண்டும் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட உள்ளார். அதேபோல், 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், விஜய்காந்த் மகனுமான விஜய பிரபாகர் விருதுநகரில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் விருதுநகரில் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.
